கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் கடன் மறு சீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராகயுள்ளது என்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாகவும்” அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.