30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச், சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால், ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை உணவில் சேர்த்து கொள்ளலாம். கேழ்வரகு போன்ற தானிய வகைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி பனங்கற்கண்டு இதுபோன்று ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். நெய் குறைந்த அளவே பயன்படுத்தலாம். தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நீரிழிவுநோய் தவிர மற்ற நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.
அதுமட்டுமின்றி ஊற வைத்த வெந்தயத்தை, தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வாருங்கள். அதுபோல வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் இருந்தால் தினமும் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடிப்பது ரொம்ப நல்லது.
அதுமட்டுமில்லாமல் இரவு வெண்டைக்காயை நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்தாலே போதும் நோய் உங்களை சீண்டி கூட பார்க்காது. இது போல தினமும் ஒரு அரை நெல்லிக்காய் ஜூஸ் எடுப்பது மிகவும் நல்லது.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இந்த சின்ன விஷயங்களை கூட தொடர்ந்து செய்து வந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளமுடியும்.