அரியலூரில் திடீரென மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததால் மக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனையடுத்து சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்களுக்கு தான் குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கின்றது.
இந்நிலையை அரியலூரிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பகல் நேரத்தில் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் அங்கு அனல் காற்று வீசுகின்றது. இதனையடுத்து மாலை 3 மணி அளவில் திடீரென மழை பொழிய ஆரம்பித்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த மழையானது 15 நிமிடத்திற்கு மேலாக பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதன் பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் ஆரம்பித்துள்ளது.