கொடூரமான சார்ஸ் நோயானது சீனாவில் பரவிவரும் நிலையில் அந்நோயால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
நிமோனியா நோய்க்குரிய அறிகுறிகள் காணப்படும் இந்நோய் காட்டு விலங்குகளிலிருந்து முதலில் பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய நகரான ஊஹான் நகரில் மட்டும் சராசரியாக 198 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊஹன் நகரில் உள்ள இறைச்சி, கடல் உணவு விற்கும் சந்தையிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கும் இந்நோய் பரவியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.