டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் 3 போட்டியிலும் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி வாய்ப்பை இழந்தது.
7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் ‘சூப்பர் 12 ‘சுற்றுக்கான தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன .இதனிடையே இன்று முதல் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளது .இதில் தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாடிய நெதர்லாந்து அணி 3 போட்டியிலும் தோல்வியடைந்ததால் சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை இழந்ததால் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதில் ‘சூப்பர் 12 ‘ சுற்றில் நெதர்லாந்து தகுதி பெறாததை எண்ணி வருத்தமடைந்த அந்த அணியின் ஆல் ரவுண்டரான ரியான் டென் டஸ்ஜெட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் .இதையடுத்து 2011-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியான் 119 ரன்கள் குவித்து இருந்தார். அதேபோல் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் குவித்து இருந்தார் .இதையடுத்து சர்வதேச ஒருநாள் தொடரில் ரியான் 1,541 ரன்கள் எடுத்துள்ளார்.