சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சத்யன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் .
சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியானது செக்குடியரசில் உள்ள ஒலாமாக் நகரில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சத்யன்,சுவீடன் நாட்டை சேர்ந்த துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்தார் . இதையடுத்து நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த யெவின் பிரைஸ்செபாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 11-0, 11-6, 11-6, 14-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சத்யன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் சத்யன் ஒற்றையர் பிரிவில் 3-வது முறையாக சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார் .