Categories
டென்னிஸ் விளையாட்டு

சர்வதேச டென்னிஸ் தொடர் : சானியா மிர்சா ஜோடி அசத்தல் வெற்றி ….அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த மகளிர்  இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மகளிர்  இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா- உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி, அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் -இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் ஜோடியை எதிர்த்து மோதியது.

இதில் 6-0, 1-6, 10-5  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி-ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன், சானியா மிர்சா ஜோடி மோத உள்ளது.

Categories

Tech |