சர்வதேச விமான நிலையம் தனியார் மயமாக்குவாதை எதிர்த்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்பட உள்ளன.
கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினை செயல்படுத்துவதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என முதல் மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.