புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான் இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார்.
சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி சிறப்பாக செயல்படும் உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளை தொடங்க ஊக்கம் அளிக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியல், அசாம் மாநிலம் முதலமைச்சர் சோனாவோல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.