சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிஷான் சிங்(38) என்பவர் வசித்து வருகிறார்.அவர் சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தொழில் வருகிறார் . கடந்த 2016- 17 ஆம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அவர் மீது இந்தியா வழக்கு பதிவு செய்துள்ளது. அதனால் அவரை கைது செய்ய வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்தது.அந்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது .
இந்நிலையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது. அதனால் அவரை நாடு கடத்துவதற்கான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிபதி அவரை கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டார் . மேலும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் அவரை ஹீத்ரு விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு ஏர் இந்தியா விமான மூலம் டெல்லிக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.