இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி நாடு முழுவதும் அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனினும் வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து அதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் ஆகும் இந்த புலிகள் காப்பகம் மட்டும்தான் பீடபூமி, மலைப்பகுதி, சமவெளிப்பகுதி நீரோடை என பல்வேறு நில அமைப்புகளை கொண்ட தனித்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடன், புலிகள் வாழ்வதற்கு ஏற்ற வாழ்விட தக அமைப்புகளுடன் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 80 க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், பவனிசாகர், கேர்மாளம், தலமலை, தூக்கநாயக்கன் பாளையம் உள்ளிட்ட வனசர்களின் வனவிலங்கு வேட்டையை தடுக்க காவலர்களை நியமிபத்துடன் வனவிலங்கு மோதல்களை தடுக்க அப்பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். புலிகளை காப்பதன் மூலம் வனவளம் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் இயற்கை சூழல் மேம்பட்டது மழைவளம் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்படும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஒரு பல்லுயிர் காப்பகமாகவே திகழ்ந்து வருகிறது.