சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக இன்று (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ஐக்கிய நாடுகளின் சபை அக் 17-ஐ வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்தது. அதன்படி இந்த வருடமும் அக்டோபர் 17 (இன்று) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள்களான “ஒன்றாக முன்னேற்றம் அடைதல், தொடரும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகம் மற்றும் அனைத்து மக்களையும் மதித்தல் போன்றவை ஆகும். இதனையடுத்து உலகவங்கி கூற்றின்படி 2020-ஆம் ஆண்டில் உலகை அச்சுறுத்திய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளியது.
மேலும் தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிதாக ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா எண்ணிக்கை இந்த ஆண்டு 14 முதல் 16 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கூறியபோது “தற்போது வறுமை அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூகங்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் உலகின் வடக்கு மற்றும் தெற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை அதிகமாக்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.