சர்வதேச டென்னிஸ் தொடரில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி தோல்வியடைந்து.
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் தொடர் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இந்தியாவின் சானியா மிர்சா-உக்ரைனின் நாடியா கிச்னோக் ஜோடி ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி- ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியை எதிர்த்து மோதியது .
இதில் 1-6, 6-2, 8-10 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது. இப்போட்டி சுமார் 1 மணிநேரம் 5 நிமிடம் வரை நீடித்தது. இதையடுத்து நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெஞ்சமின் போன்ஜி -ஹூகோ நிஸ் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.