Categories
அரசியல் மாநில செய்திகள்

சசியை அதிமுகவில் இணைக்கலாமா…? மறுப்பு தெரிவித்த இபிஎஸ்…. அதிருப்தியில் அமித்ஷா…!!

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டுமென்ற அமித்ஷாவின் கோரிக்கைக்கு முதல்வர் எடப்பாடி மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை மும்முரமாக செய்து வருகின்றனர். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அமித்ஷா பிரச்சாரத்திற்காக சென்னை வந்தார். இதையடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர் நேற்று இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை தனியாக சந்தித்துள்ளார்.

அப்போது பாஜகவுக்கு பாஜகவுக்கு 25 தொகுதிகள் வழங்குமாறு உறுதியாக பேசியதாகவும், ஆனால் அதிமுக சம்மதம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அமித்ஷா அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிந்தபிறகு அமைச்சா் அமித்ஷாஞ் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் விரைவில் பாஜக தொகுதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |