Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா செய்த மிகப் பெரிய தவறு… கட்டாயம் நடவடிக்கை எடுக்கணும்… அமைச்சர் ஜெயக்குமார்… !!!

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு தமிழக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.  உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர், இன்று தமிழகம் வந்துள்ளார். அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ” எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இப்போது வரை அதிமுக மிக எழுச்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக சிறப்பான முறையில் பணியினை ஆற்றி வருகிறது. அதிமுகவிற்கும் சசிகலா தரப்பினருக்கும்  எவ்வித தொடர்பும் கிடையாது. சசிகலா மற்றும் தினகரன் இருவரும் அதிமுக உறுப்பினர்களாக முடியாது.

அவர்கள் எப்பொழுதும் அதிமுக கொடியை பயன்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக கட்சியையும் அதனின் கொடியையும் சசிகலா என்றும் உரிமையாக்கிக் கொள்ள முடியாது.அதிமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்த கருத்துடன் உள்ளனர். அதிமுக கட்சியில் எந்த ஒரு கருப்பு ஆடும் இல்லை என்றும்  நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.

அதிமுக கட்சியின் கொடியை பயன்படுத்திய காரணத்திற்காக காவல்துறை அவர்களின் கடமையை நன்றாக செய்து வருகிறது. அதிமுக இவ்விவகாரத்தை சட்டப்படி மட்டுமே கையாண்டு வருகிறது. சசிகலா வருகையால் அதிமுகவிற்கு எவ்வித பதற்றமும் இருப்பதாக தெரியவில்லை டிடிவி தினகரனுக்கு பதற்றம். சசிகலாவை நினைத்தாலும் அதிமுகவின் ஒற்றுமையை ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஒரு கருப்பு ஆடும் அதிமுகவில் இருக்க முடியாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Categories

Tech |