Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏழையின் வீட்டில் கஞ்சி காய்ச்சிய…… எதிர்கால முதல்வர் சசிகலா என கோஷம் …!!

மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், தானும் தனது இல்லத்திலிருந்து நீந்தி வரக்கூடிய சூழல் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஒரு பிரிவு தொண்டர்களால் தியாகத் தலைவி சின்னம்மா எனப் போற்றப்படுபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. சிறையில் இருந்து விடுதலையான பின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிக்கை விடுத்த சசிகலா, தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்து பூந்த மல்லி, கோரிமேடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார். வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய சசிகலா அங்கிருந்த கூரை வீடு ஒன்றில் கஞ்சி காய்ச்சுவதற்கு தன்னாலான உதவிகளை செய்தார்.

பின்னர் அப்பகுதி மக்களுக்கு உதவி பொருள்களை வாங்கினார். அப்போது மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தான் நன்கு அறிந்திருப்பதாகவும், தனது வீட்டை சுற்றியும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தண்ணீரில் நீந்தி வந்திருப்பதாகவும் கூறிய சசிகலா, அம்மா அவர்கள் சொன்னதைக் காப்பாற்ற தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்வேன் என உறுதியளித்தார்.

Categories

Tech |