Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை வரவேற்க வந்த…. 2 கார்கள் தீப்பிடித்ததால்…. பெரும் பரபரப்பு…!!

சசிகலாவை வரவேற்க வந்த இரண்டு கார்கள் தீப்பிடித்து மளமளவென எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு தனியார் பண்ணை வீட்டிலிருந்த சசிகலா இன்று காலை அங்கிருந்து கிளம்பி தமிழகம் வந்து கொண்டு இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுகிலும் நிற்கின்றனர். மேலும் அவர்கள் ஆங்காங்கே காரை நிறுத்தி பட்டாசு வெடித்தல், பூ தூவுதல், ஆரத்தி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவுக்கு வரவேற்புக்கு ஆயிரக்கணக்கான கார்கள் நின்றுகொண்டிருந்துள்ளது.

அப்போது ஒருவர் கொண்டு வந்த காரில் இருந்த பட்டாசு வெடிக்க தொடங்கியதால் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் தீ மளமளவென பரவியதால் பக்கத்தில் நின்ற மற்றொரு காரும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கார்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காரை  அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |