Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த வாரம் வெளியே வருகிறார் சசிகலா – பரபரப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் தண்டனை காலம் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அவர் விடுதலை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் வெளிவர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறைக்கைதிகள் நன்னடத்தையின் படி சிறையில் இருந்து 43 மாதங்களுக்கு 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் சசிகலாவுக்கு தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |