சசிகலா மருத்துவமனையிலிருந்து விடுதலையாகியுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விட்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதனால் உற்சாகம் அடைந்த அவருடைய ஆதரவாளர்கள் மருத்துவமனையின் முன்பு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து பெங்களூர் சொகுசு விடுதியில் சசிகலா சில நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.