Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ADMK உறுப்பினர் தான்… எடப்பாடி திருத்திக் கொள்ளுங்க… ஓபிஎஸ் அணி எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இருப்பவர்களும் திருந்திக் கொண்டு இந்த கட்சியை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு அம்மா சொன்ன நூறாண்டுகளானாலும் மக்கள் செல்வக்கு இருப்பதற்கு, அம்மா அவர்கள் காப்பாற்றி கொடுத்த கட்சி, அந்த கட்சியை காப்பாற்றுவதற்கு ஏன் அழிக்கிறீர்கள் ? கெடுக்கிறீர்கள் ? என்று கேட்கிறோம்.

சசிகலா அண்ணா திமுகவில் இப்போதும் உறுப்பினராக இருக்கிறார்கள், இன்று வரை எல்லா தொலைக்காட்சியிலும் சொல்லும்போது அவர்களை தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருந்து தான் எடுத்தோமே ஒழிய, கட்சியினுடைய உறுப்பினர் அவர்கள். அதனால் அவர்கள் அண்ணா திமுக உறுப்பினராக இருக்கும்போது புதிதாக வந்து இணைய வேண்டியது இல்லை, அவர்களாக சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  கட்சியினுடைய உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் எப்போதும் போல இருப்பார் என தெரிவித்தார்.

Categories

Tech |