Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை…. மாதம், தேதி என்ன தெரியுமா ? தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் நான்கு பேரையும் விடுதலை செய்தது.  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு தீர்ப்பை உறுதி செய்து, நால்வருக்கும் அபராதம் விதித்து சிறை தண்டனையை உறுதி படுத்தியது.

இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டதால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மீதம் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரின் தண்டனையை நிறைவடைந்ததை அடுத்து எப்போது ? சிறையில் இருந்து மூவரும் விடுவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி அதிகமாக எழுந்த நிலையில் தற்போது விடுதலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில், சொத்து குவிப்பு வழக்கில்  4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என்று ட்விட் செய்துள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |