சசிகலா விடுதலையில் எந்த சலுகையும் கிடையாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற சசிகலாவிற்கு தண்டனை காலம் முடிய உள்ளதால் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கர்நாடக சிறைத்துறை, அவரின் நன்னடத்தை காரணமாக 120 நாள் சலுகை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றும் கூறினார். சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் அண்மையில் வழங்கப்பட்டது.
இதனால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை “சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவிற்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சிறை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.