சசிகலா மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 வருடம் சிறை தண்டனைக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். எனவே சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் சசிகள நிலை மிக மோசமாக உள்ளதா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. இதுவரை நன்றாக இருந்ததாக அவருடைய உடல்நிலை எப்படி இப்படி மோசமாகும் என்று கேள்வி எழுகிறது. இதையடுத்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாக காய்ச்சலில் இருந்த சசிகலாவுக்கு சரியான சிகிச்சை கொடுக்கவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.
சக்கர நாற்காலியில் sasikala பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி @karthickselvaa @subashprabhu pic.twitter.com/ui1ZliN2DU
— RAMESH-MURUGESAN (@rameshibn) January 20, 2021