சசிகலா ஒழிக என்று எங்களாலும் போஸ்டர் ஒட்ட முடியும் என்று சிவி சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுகவை சேர்ந்த சிலரை வைத்து சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதையடுத்து அதிமுக தலைமை அவர்களின் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜெ.ரகுபதி சசிகலாவை வரவேற்று ஒட்டியுள்ள போஸ்டரில், “பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்று பெங்களூரில் இருந்து வருகைதரும் சின்னம்மா அவர்களை வரவேற்கிறோம்” என்று ஒட்டி உள்ளதால் விழுப்புரம் நகர அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான சிவி சண்முகம் “எங்களாலும் சசிகாலவே ஒழிக” என்று போஸ்டர் ஒட்ட முடியும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.