சசிகலா இளவரசி விடுதலை குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை காரணமாக ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்ற சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை செய்தியும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வுலகில் குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் விதித்த அபராதத் தொகையை செலுத்தி விட்டனர்.
இதையடுத்து சசிகலா ஜனவரி 27 அன்றும், இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதியும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. மற்றொரு குற்றவாளி சுதாகரன் இன்னும் அபராத தொகை 10 கோடியே செலுத்தாததால் அவர் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்படும் என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது.