Categories
மாநில செய்திகள்

யாருடா நீ…? சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் கிடந்த நபர்…. கணவர் பரபரப்பு புகார்…!!!

திமுகவின் முன்னாள் எம்பியான சசிகலா புஷ்பா உட்பட மூன்று நபர்கள் மீது அவரின் 2-ஆம்  கணவர் ராமசாமி அளித்த புகாரின் படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் இரண்டாம் கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் படி, காவல்துறையினர் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தன் புகாரில் தெரிவித்திருப்பதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு வாகனத்தில் கடந்த 13ஆம் தேதி அன்று என் மகளோடு சென்னைக்கு சென்றேன்.

அங்கு, ஜீவன் பீமா நகரில் இருக்கும் என் வீட்டின் கதவை தட்டியபோது அமுதா என்ற பெண் கதவை திறந்தார். எங்கள் வீட்டில் சில உணவு பொட்டலங்கள் சிதறிக்கிடந்தது. ஆல்கஹால் வாசனையும் வந்தது. படுக்கை அறையில் என் மனைவி சசிகலா புஷ்பா இருந்தார்.

இன்னொரு படுக்கையறையில், ஒரு மர்ம நபர் அரைகுறை உடையுடன் கிடந்தார். இதனால், அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக என் செல்போனில் அவரை வீடியோ எடுத்தேன். அதற்கு, அமுதா என்ற பெண்ணும், அந்த நபருக்கும் சேர்ந்து என்னை அசிங்கமாக திட்டி மிரட்டினார்கள். எனவே, அவர்கள் மீதும், கணவனாகிய எனக்கு தெரியாமல், அடையாளம் தெரியாத நபர்களை வீட்டிற்குள் வர வைத்த மனைவி சசிகலா புஷ்பா மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |