சசிகலாவின் விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே சசிகலாவின் விடுதலையில் மற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழும்பியது. இதையடுத்து வரும் 27ஆம் தேதி சசிகலா திட்டமிட்டபடி விடுதலையாவார் என்றும், இதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது சசிகலாவின் குறித்து வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.