சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா .
இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்பது உறுதியாகியுள்ளது என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து இளவரசி பிப்ரவரி-5 ஆம் தேதி வெளியாகிறார் என்று கூறப்படுகிறது.