சசிகலா பூரண குணமடைய வேண்டுவதாக துணை முதல்வரின் இளைய மகன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் சசிகலாவிற்கு ஆதரவாக பேசுபவர்கள், போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது அதிமுக கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சசிகலா நடராஜன் பூரண குணமடைய வேண்டும் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில், “சசிகலா நடராஜன் பூரண குணமடைய வேண்டும் என்றுதான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இது அரசியல் பதிவல்ல மனதில் தோன்றிய பதிவு” என்று பதிவிட்டுள்ளார்.