சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்களில் இபிஎஸ் – ஓபிஎஸ் படங்கள் இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி அன்று தண்டனை காலம் முடிந்து விடுதலையானார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட நோய்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து தற்போது பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து சசிகலாவின் வருகைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே கூக்கால், வில்பட்டியில் அதிமுக கிளை செயலாளர்கள் சார்பில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்ற அதிமுகவினர் ஓட்டிய போஸ்டர்களில் இபிஎஸ் – ஓபிஎஸ் படங்களும் இடம் பெற்றுள்ளன. சசிகலாவுக்கு ஆதரவளித்து போஸ்டர் ஒட்டுவதற்கு பின்னால் ஓபிஎஸ் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.