சசிகலாவின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாபெரும் அரசியல் ஆளுமையும் கொண்ட சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரம் ஆகியும், இன்னும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். வரும் 27ஆம் தேதி சசிகள விடுதலையாக உள்ள நிலையில் அவருடைய உடல்நிலையில் சிறை நிர்வாகம் கவனம் செலுத்தாதது வேதனை அளிக்கிறது. கடந்த ஏழு நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் அதை உறவினர்கள் மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர்களிடம் சிறைத்துறை ஏன் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்று சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு மீண்டும் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து காரணம் என்ன? என்று கேட்டுள்ளார். எனவே ஒட்டு மக்களும் அவருடைய வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவருடைய சிகிச்சையில் வெளிப்படை தன்மையை தமிழ் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.