திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவை பற்றி அவதூறாக பேசியதால் அவர் மீது பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் பல்வேறு முறைகளில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனை எதிர்த்து அண்ணா திராவிடர் கழகம், அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அண்ணா திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.ராஜா தலைமையில் உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அதனை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாது உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை எரித்தும், காலணியால் அடித்தும்,எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனால் மயிலாடுதுறையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே ஸ்டாலின் கலந்து கொண்ட மக்கள் சபை கூட்டத்தில் பெண்களை திமுக தாக்கி விட்டது என அதிமுக போராட்டம் நடத்திய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் விவகாரம் திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.