தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வருபவர் சசிகுமார். இவர் முதலில் பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார். இவர் அடுத்தடுத்ததாக திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தின் டைட்டில் போன்று வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாகி வருகிறது. சசிகுமாரின் ராஜவம்சம் படத்தை தயாரித்த பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்த உள்ளார். வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.