Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ”எம்.ஜி.ஆர்.மகன்”…. OTT யில் ரிலீஸ்…. வெளியான புதிய அறிவிப்பு….!!

சசிகுமார் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வெளியாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சசிகுமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகன் ஆவார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் பொன்ராம் இயக்கத்தில் ”எம்.ஜி.ஆர்.மகன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.

இப்படத்தில், சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, நந்திதா ஆகியோரும் நடித்துள்ளனர். திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடுவதாக படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, தீபாவளியன்று டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் OTT  தளத்தில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் எம்ஜிஆர் மகன் Entertainment பொழுதுபோக்கு

Categories

Tech |