Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் குற்றவாளி: முதல்வரை விசாரிக்க கோரி மனு …!!

சாத்தான்குளம்  இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது:

வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள்  உடல்நிலை கோளாறு காரணமாகத் தான் உயிர் இறந்தார்கள் என்று முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளதது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கின் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி காவல் துறையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வசமுள்ள உள்துறை இலாகாவின் கீழ் வருவது மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இலாகாவை முதலமைச்சர் பழனிசாமி வைத்திருந்தால் இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்றும் வழக்கு முடியும் வரை உள்துறை இலாகா பொறுப்பை முதலமைச்சர் பழனிசாமி வைத்திருக்கக்கூடாது. எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |