சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் சாராய சோதனை நடத்தினர்.
அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன், கூடநகரம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த அம்முராஜகுமாரி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.