சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரியாப்பட்டினம் காவல் எல்லை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் முதியவர் ராம்சிங் என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், ஊறல் போட்டு வைத்திருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.அதன்பின் வீட்டில் இருந்த 1 லிட்டர் எரிசாராயம் மற்றும் 2 கேன்களில் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செய்த காவல்துறையினர் ராம் சிங்கை கைது செய்துள்ளனர்.