சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 1-வது கேட் பாண்டுரங்கன் தெருவில் அம்மமுத்து மகன் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் கணேஷ் கஞ்சா விற்பனை செய்ததை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து கணேஷை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.