Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” சிக்கி கொண்ட பெண்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில் விற்பனை செய்த புஷ்பம் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |