சட்டவிரோதமாக ஆற்றலிருந்து மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளுவதால் கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் குலோத்துங்கன் நல்லோர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்பதான் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி விசாரித்தபோது அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவில் வசித்துவரும் சதாசிவம் என்பதும், இவர் அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சதாசிவத்தை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 5 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.