சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொத்தவாசல் ஆற்றுப் பாலம் அருகில் வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சாக்குமூட்டையில் மணல் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கொத்தவாசல் தெற்கு தெருவை சேர்ந்த விக்னேஷ், ராஜபிரகாஷ் என்பதும், இவர்கள் திருமலைராஜன் ஆற்றிலிருந்து சாக்குமூட்டையில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், ராஜபிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.