சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சூரணி கண்மாயில் கிராவல் மண் அள்ளப்படுவதாக தாலுகா அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. அதன்படி வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சரவணன், குகன்பாறை கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, தலையாரி வெயில் முத்து போன்றோர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஊருணியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.