Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடோனில் சோதனை…. சிக்கி கொண்ட வியாபாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பதவியேற்றார். அப்போது இந்த பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவில் உள்ள கடைகளுக்கு பீடி சப்ளை செய்வது மொத்த விற்பனையாளர் முகம்மது அப்துல்காதர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் பீடிக் கட்டுகள் மொத்தமாக வைக்கும் குடோனுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் 2 லட்சம் மதிப்பிலான 32 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகம்மது அப்துல் காதரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |