சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர்-நாகை பைபாஸ் சாலை பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் போன்றோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன், குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் ஆகிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.