சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி தங்கம் மண்டபம் எதிரே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி தட்சன் பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8260 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.