Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சாராய விற்பனை மற்றும் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி 3 தனிப்படைகள் கொண்ட காவல்துறையினர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கந்திலி, குரிசிலாப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, வெற்றிவேந்தன், கந்தன், முத்து, பாலன், சக்திவேல், பிரேமா, வாணியம்பாடியைச் சேர்ந்த குமார், ஆம்பூரை சேர்ந்த ஆனந்தன், சந்திரன், குபேந்திரன், ராஜா, எத்திராஜ் ஆகியோரை காவல்துறையினர் சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மணல் கடத்தல் சம்பவத்தில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த சிவசங்கரன், இளவரசன், விமல்குமார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயம், 1600 லிட்டர் சாராய ஊறல், அரசு மதுபான 48 லிட்டர் ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். அதன்பின் மணல் மற்றும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 1 மினி லாரி, 1 ஆட்டோ மற்றும் மாட்டு வண்டி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |