சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது பெட்டிக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது சப்-இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து 12 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு மாரியப்பனை கைது செய்தனர்.
இதைப்போன்று சத்யாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு மது பாட்டில்கள் விற்பனை செய்த சிட்டி, பால்பாண்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் திருத்தங்கள் காவல்துறையினர் அதிவீரன்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனை செய்த சிவகுமார் என்பவரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.