Categories
உலக செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கையும் களவுமாக சிக்கிய 3 பேர்…. சிங்கப்பூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு….!!

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 2 பேருக்கு மரண தண்டனையும், மற்றொருவருக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிங்கப்பூர் நாட்டில் கடந்த 2016-ஆம் வருடம் மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப் பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்ததாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று அவர்களிடம் இருந்து அந்த போதைப் பொருட்களை வாங்கிய சந்துரு சுப்ரமணியம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கமல்நாதம் முனியாண்டிக்கும், சந்துரு சுப்ரமணியம் என்பவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

மேலும் பிரவினாஷ் சந்திரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிப்பட்டது. இந்நிலையில் தங்கள் மீதான குற்றசாட்டை மறுத்த 3 பேரும் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலமாக கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேரின் மரண தண்டனையையும், பிரவினாஷ் சந்திரனின் சிறை தண்டனையும் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துவிட்டது.

Categories

Tech |