சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள எம்.காளிப்பட்டி மாரியம்மன் கோவில் விதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பூங்கொடி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக மேச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வீட்டில் 24 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, பூங்கொடியை கைது செய்தனர்.