சட்டவிரோதமாக நடத்திவந்த ஏ.சி பாருக்கு அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் நடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தனி தாசில்தார் ராஜராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டவிரோதமாக நடத்திவந்த அந்த பாருக்கு பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.